தமிழில் Regular Expression(Regex)

Regular Expression என்றால் என்ன?

அலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்ற பொதுவான வடிவத்தில் இருக்கும் வார்த்தைகளுக்கு Pattern  என்று ஆங்கிலத்தில் பெயர்.  அதை ஜாவா, பைத்தான் போன்ற கணினி மொழிகளில் Regular Expression என்று சொல்வார்கள்.
எ.கா. அலைபேசி எண் என்றாலே 10 எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் என்றாலே @, . ஆகிய குறியீடுகள் இருக்கும்.

Regular Expression எங்கெல்லாம் பயன்படும்?

1) எங்கெல்லாம் மனிதர்களுக்குப் பதிலாகக் கருவிகள் கேள்விகள் கேட்குமோ அங்கெல்லாம்!  எடுத்துக்காட்டாக, “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், For English press Two” என்று அலைபேசியில் தானியங்கிக் குரல் கேட்கும் அல்லவா?  அங்கே கருவி கேள்வி கேட்க, நாம் பதில் சொல்கிறோம்.  நம்முடைய பதில் என்ன வடிவத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து கருவி அடுத்த வேலையைச் செய்கிறது அல்லவா?  இங்கு Regular Expression பயன்படும்.
2) கணினியில் எங்கெல்லாம் விண்ணப்பங்கள் நிரப்புகிறோமோ அங்கெல்லாம்!  மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் இடத்தில் அலைபேசி எண்கள், மாற்று மின்னஞ்சல் முகவரி ஆகியன கொடுப்போம் அல்லவா?  அதையெல்லாம் நாம் சரியான வடிவத்தில்  தான் கொடுத்திருக்கிறோமா என்பதை உறுதி செய்யும் இடத்தில் Regular Expression பயன்படும்.
3) TCP / IP முதலிய தொலைத் தொடர்பு வழிமுறைகளில்.
4) Compiler, Interpreter, Assembler ஆகியன சரியான வடிவத்தில் உள்ளீட்டைக் கொடுத்தால் வேலை செய்யும் அல்லவா?  அங்கெல்லாம் Regular Expression பயன்படும்.
5) Digital Circuitகளில் பயன்படும்.
6)  பெயர் மறந்து போன கோப்பு ஒன்றைத் தேட, சில நேரங்களில் அந்தக் கோப்பின் நீட்சியை(Extension)க் கொடுத்து (எ.கா. *.txt என்று) தேடுவோம் அல்லவா?  அங்கும் Regular Expression பயன்படும்.

இந்த Regular Expression என்பதைச் சுருக்கமாக, RegEx என்றும் சொல்வார்கள்.

எந்தெந்த மொழிகளில் Regex இருக்கிறது?

கிட்டத்தட்ட கணினி மொழிகள் எல்லாவற்றிலும்!  ஜாவா, பைத்தான், சிஷார்ப், பெர்ல் என்று எல்லா மொழிகளுமே Regexஐ ஆதரிக்கின்றன.

Regular Expression ஐத் தமிழில் படிக்க:

https://www.youtube.com/playlist?list=PLgWpUXNR_WCfuWfZv3pDAMk2HR-Mxju1D