PAYILAGAM IN 'THE HINDU'

PAYILAGAM IN ‘THE HINDU’

The HinduBUILDING SKILL SETS, BUILDING LIVES

A group of young professionals, mostly from the IT sector, who realised that the 10+2+4 education system may not be enough for the job market, have come together to start Payilagam Software Training Institute.

“There are 27 of us trainers, all of us friends from school or college or the IT industry and we utilise our free time to teach these youngsters,” says M. Manikandan, director of the institute that provides free training to those from marginalised backgrounds. “We choose graduates from poor families and offer them free training. We filter out those who can afford to pay,” he explains.

Payilagam, which is situated in Velachery, began providing free courses two months ago and now provides training in different subjects including software testing, Java, .NET, Mainframe, PHP, Oracle and NetApp. The institute also has a paid training programme and the free students study along with the regular students, says Mr. Manikandan.

K. Muthuramalingam, a senior software engineer at an IT company in Taramani, who spares an hour every day and four hours on weekends, says a large percentage of the students are under pressure to get jobs as they have loans to 8repay.

“At just 20 years of age, they have a loan burden and are ready to learn subjects that can guarantee jobs,” he says.

Students can log ontowww.payilagam.comand click the free training course option and fill in the application online. “There are no hidden costs involved including any application fee or registration fee or for the computers the students use,” Mr. Muthuramalingam adds.

Link: http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/online-shopping-gets-a-community-flavour/article6923428.ece

ARTICLE ON PLACEMENT IN 'THE HINDU TAMIL'

The Hindu Tamil

தடையைத் தாண்டி வேலையைப் பிடிக்க

படித்து முடித்த பின் கை நிறையச் சம்பளத்துடன் வேலை கிடைத்தால் போதும்! வேறென்ன வேண்டும்?

வேலை தேடுவோருக்குத் தடைகளாக இருப்பவை:

தன் விவரக் குறிப்பு

பயோ டேட்டா தான் உங்களுடைய உண்மையான முகம்! கையில் இருக்கும் பயோடேட்டாவில் உங்களுடைய லேட்டஸ்ட் தகவல்கள் அனைத்தும் இருக்கின்றனவா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.

அதில் உங்களுக்குத் தெரியாத ஒன்றைத் தெரியும் என குறிக்காதீர்கள். அப்படிச் செய்பவர்கள் நேர்காணலில் வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.

ஆப்டிடியூட் தேர்வு

தேவைக்கு அதிகமாக நேர்காணலுக்கு ஆட்கள் வரும்போது நிறுவனங்கள் ஆப்டிடியூட் டெஸ்ட் என்னும் தேர்வை வைக்கின்றன.

அந்த நிறுவனத்தின் ஆப்டிடியூட் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையத்திலோ,தெரிந்தவர்கள் மூலமாகவோ தேடி எடுத்து, அந்த நிறுவனத்துக்கு ஏற்பத் தயாராகுங்கள்.

அந்தத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் பள்ளிக்கூடத்தில் படித்த கணக்கு தான்!

4 பேர் சேர்ந்து ஒரு வீட்டை 40 நாட்களில் கட்டினால் 3 பேர் அதே வீட்டைக் கட்ட எத்தனை நாட்கள் ஆகும்?

என்பன போன்ற கேள்விகள்தான் கேட்கப்படும். ஆர். எஸ். அகர்வால் எழுதிய ‘குவான்டிடேட்டிவ் ஆப்டிடியூட்’ என்னும் புத்தகத்தைப் படித்தாலே போதுமானது.

சில நிறுவனங்களில் இவ்வகைக் கணக்குகளோடு சேர்த்து விடுகதைகளையும் தேர்வில் வைத்திருப்பார்கள். எளிமையான விடுகதைகளாகத் தான் இருக்கும்.

வேறு சில நிறுவனங்களில் ‘வெர்பல்’ எனப்படும் ஆங்கிலம் அறி தேர்வு நடத்துவார்கள். ஒரு ஆங்கில வார்த்தையைக் கொடுத்து அதற்கான அர்த்தம் என்ன என்பதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றுள் சரியானதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதற்கும் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. 40 கேள்விகளை ஒரு மணிநேரத்தில் முடிக்கச் சொல்வார்கள். ஒழுங்கான தயாரிப்பு இல்லை என்றால் நேரப் பற்றாக்குறையில் சிக்கிக்கொள்வீர்கள்.

நேர்காணல்

நீங்களும் நிறுவன அதிகாரிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கப் போகிறீர்கள். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். எனவே நல்ல உடை உடுத்தி நேர்காணலுக்குச் செல்லுங்கள்.

# முன்னதாகவே நேர்காணலுக்குச் செல்லுங்கள். கடைசி நிமிடத்தில் கிளம்பாதீர்கள். போக்குவரத்து நெருக்கடியில் மாட்டினால் அதுவே உங்களுடைய மன நிலையை மாற்றிவிடும். சரியில்லாத மன நிலையுடன் நேர்காணலில் இருப்பதே பாதித் தோல்வி.

# நேர்காணல் அறைக்குள் போவதற்கு முன், உங்கள் செல்போனை அமைதியாக்குங்கள்.

# நேர்காணலின் முதல் கேள்வி பெரும்பாலும் ‘உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ என்பதாகத்தான் இருக்கும். அக்கேள்விக்குத் தயாராகச் செல்லுங்கள்.

# நேர்காணல் என்பது ஒரு கலந்துரையாடல்தான். வந்திருப்பவர் – நம்முடைய நிறுவனத்துக்கு ஏற்றவரா, வேலைக்கு ஏற்றவரா, வந்திருப்பவரை வைத்து வேலை வாங்க முடியுமா, நீண்ட காலம் நம்மோடு இருப்பாரா என்று நிறுவனங்கள் சோதிக்கின்றன. எனவே, எந்தக் கேள்விக்கும் பொய்யான பதிலைச் சொல்லி விடாதீர்கள். உங்களை நிராகரித்துவிடுவார்கள்.

# தவிர்க்க முடியாத நேரங்களில், உண்மையை மறைக்கலாம்; தப்பில்லை. ஆனால் பொய் சொல்லக் கூடாது.

# நேர்காணலில் நீங்கள் சொல்லும் முதல் பதிலில் இருந்துதான் அடுத்த கேள்வியே கேட்பார்கள். எனவே ஒவ்வொரு பதிலையும் கவனமாகச் சொல்லுங்கள். எக்காரணம் கொண்டும் கவர்வதற்காகத் தவறான பதில்களைச் சொல்லாதீர்கள்.

# விரிவாக்கங்கள் வேண்டாம்

‘SPB’ என்பவர் யார்? என்று ஒருவர் உங்களிடம் கேட்டால் ‘S.P. பாலசுப்பிரமணியம்’ என்றா சொல்வீர்கள்? அவர் ஒரு பாடகர், பல படங்களில் நடித்திருக்கிறார், இசையமைத்திருக்கிறார் என்று உங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்வீர்கள் அல்லவா? அதே போல் தான் நேர்காணலும்! ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் ‘OOPs’ என்றால் என்ன? என்று கேட்கிறார்கள்; அதற்கு ‘Object Oriented Programming’ என்று விரிவாக்கம் மட்டும் சொல்லக் கூடாது.

# ஒரு வரி பதில்கள் கூடாது

நேர்காணல் என்பது ஒரு கலந்துரையாடல். ஒரு வரி பதில்களோ, ஒரு வார்த்தை பதில்களோ அந்தக் கலந்துரையாடலை நீர்த்துப் போக வைத்து விடும். கூடியவரை விரிவான விளக்கங்களைக் கொடுக்க முயலுங்கள்.

நிறுவனம் பற்றிய புரிதல்

நீங்கள் எந்த நிறுவனத்துக்குப் போகிறீர்களோ, அந்த நிறுவனத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள் உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். நேர்காணலில் ‘எங்க நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்’ எனக் கேள்வி வரும்.

# நீங்கள் எத்தனை ஆண்டுகள் எங்கள் நிறுவனத்தில் இருப்பீர்கள்?
# வேறொரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தால் அங்கு போய் விடுவீர்களா?
# இங்கு உங்களைச் சக்கையாகப் பிழிந்து விடுவார்கள். பரவாயில்லையா?
# இன்னும் மூன்று ஆண்டுகளில் என்னவாக விரும்புகிறீர்கள்?
# எங்களிடம் இரண்டாண்டு காலம் ஒப்பந்தம் (பாண்டு) இருக்கிறது. அதற்கு ஒப்புக்கொள்கிறீர்களா?

போன்ற கடினமானக் கேள்விகளும் கேட்கப்படும். பொய் சொல்லக் கூடாது; ஆனால், உண்மையை மறைக்கலாம் என்னும் விதி இங்கும் பொருந்தும்.

கடைசி கேள்வி:
நேர்காணலின் முடிவில், ‘நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா?’ என்று பல நிறுவனங்களில் கேட்பார்கள். எதிர்மறைக் கேள்விகளைத் தவிர்த்து விடுங்கள்.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலைக்குச் சேர்வதற்கு முன் ஏதாவது படித்து வர வேண்டுமா?

என்பன போன்ற கேள்விகளைக் கேட்கலாம்.

இந்த தடைகளை எல்லாம் தாண்டிட்டா, இனி நீங்கள் வேலையை நோக்கி நடையைப் போடலாம்.

– முத்து (muthu@payilagam.com)

Link: tamil.thehindu.com

BASIC ALGORITHMS EVENT IN 'DINAKARAN'

Payilagam at Dinakaran

FREE COURSE NEWS IN 'VELACHERY TALK'

Velachery talk

Payilagam at Velachery Talk

SEO SESSION NEWS IN 'DINAMANI'

SEO Basics Engagements Dinamani

NEWS ON FREE COURSE IN 'ADYAR TIMES'

Payilagam in Adyar Times

ENGINEERS OFFER FREE COMPUTER SERVICE IN 'NEWS TODAY'

NewsToday

Chennai: A group of engineers from Chennai has come together to offer free service for laptop and computer repairs. This comes as part of relief operations from individuals to help the flood-affected people.

A number of electronic gadgets, including computers, were damaged when the houses of many became inundated with floodwaters. Director of Payilagam Software Institute M Manikandan is the man behind the initiative to help such people. He channelised the idea of his team members who wanted to do something for society at this time of great calamity.

Speaking to ‘News Today’ about their effort, he says, ‘There are around 30 people in our institute. Five of them were keen on helping others and they have formed a team to service laptops. We have received over 20 calls for the upcoming service session and it has become easy for us to gauge the requirements. However, people can walk into our premises directly to get the service done for free.’

Situated at Vijayanagar, Velacheri, the institute is open for free computer service on Sundays (13 and 20 December). This would help even office-goers to make use of this facility. ‘We also give free software training in platforms like Java and Dot Net to economically backward class graduates in order to make them job ready,’ he adds.

Installation of software and other applications can also be availed of as part of this service. People can reach the team at 4/67, Vijayanagar Third Cross Street, Velacheri, Chennai – 600042 or contact 8883775533.

Link: http://newstodaynet.com/chennai/next-comes-free-computer-service-chennai

வெள்ளம் பாதித்த லேப்டாப்களுக்கு இலவச சர்வீஸ் IN 'DINAMALAR'

dinamalar

வெள்ளம் பாதித்த லேப்டாப்களுக்கு இலவச சர்வீஸ்

சென்னை : கடந்த இரண்டு வாரங்களாகச் சென்னையில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள் எனப் பலரின் கணினி, மடிக்கணினி ஆகியவை பழுதடைந்திருக்கும். இந்தச் சூழலில், மென்பொருள் துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் இணைந்து இலவசக் கணினி, மடிக்கணினி பழுது நீக்கம் (சர்வீஸ்), லினக்ஸ், ஜாவா, லிபர் ஆபிஸ் போன்ற கட்டற்ற மென்பொருள் இன்ஸ்டாலேஷன் ஆகியவற்றை இலவசமாகச் செய்ய முன்வந்திருக்கிறோம். இதற்காக, வரும் டிசம்பர் 13, 20 ஆகிய இரு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேளச்சேரியில் உள்ள பயிலகம் நிறுவனத்தில் ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் கணினி/மடிக்கணினிகளுக்கு இலவச சர்வீஸ் முகாம்’ நடத்தவிருக்கிறோம்.

முகாம் முகவரி: பயிலகம்,
4/67இ, விஜய நகர் 3ஆவது குறுக்குத் தெரு,
வேளச்சேரி, சென்னை – 600042
பேசி: +91 8883775533

Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1409120