Blog

QUICK ENQUIRY FORM



WHAT WILL HAPPEN WHEN YOU SUBMIT THIS FORM

  • After submitting the enquiry, you will be contacted by our team.
  • Payilagam Team will get to know about your training needs.
  • They will update you how could they help you.
  • Trainers(IT Professionals) may contact you if you need any clarification.
  • Your contact information will be kept highly confidential & not be shared to 3rd Parties.
Quick Enquiry

Learn Selenium Series – 1: How to handle Windows Alerts in Selenium

This is our first post in Learn Selenium Series.  Today, we are going to discuss about handling Windows Alerts in Selenium.  Selenium is a web application automation tool.  Hence, handling all kinds of Alerts like Confirmation Alert, Prompt Alert are straight forwarded Alerts.  Selenium should support handling these alerts and it does also. How to handle Windows Alerts in Selenium The biggest question stands in front of us is – How can we handle Windows Alerts in Selenium?  Without handling Windows Alerts, it is impossible to get involved in real projects.  There are some third party tools used along with Selenium.  One such tool is AutoIT.  It uses Scripting language to handle Windows Alerts.  Selenium developers can use this tool as it is a free Software. Is AutoIT the only solution? Though AutoIT helps to handle Windows Alerts, there are some prerequisites also.  The very primary prerequisite is the Automation Testers (Or Selenium Developers) should know the scripting language also along with their OOP language.  This could be a major hurdle for them.  Is there anyother solution for this?  Do Java, the evergreen language has any solution for this internally? Robot Class in Java: There is a predefined Java Class called Robot.  This is present in java.awt package.  Java Doc says that Robot class is used to generate native system input events for the purposes of test automation, self-running demos, and other applications where control of the mouse and keyboard is needed. The primary purpose of Robot is to facilitate automated testing of Java platform implementations. There is one more class called KeyEvent.  This is present in java.awt.event package.  An event which indicates that a keystroke occurred in a component.  We can make use of […]

Selenium Training in Chennai – How it overcomes QTP/UFT?

After years gap, I am writing this post on Software Testing.  My previous post on this topic can be found here.  We all know that there are two great tools for Automation Testing.  One is QTP (now, it is UFT) and the other one is Selenium.  There are plenty of differences between these two tools.  The former is from HP, based on VB Script language. The latter is from ThoughtWorks, based on any Object Oriented Programming language like Java, C#, Python or Ruby.  QTP / UFT is proprietary software where as Selenium is Free Software.  You can get it from http://docs.seleniumhq.org/. Though UFT supports both Windows Environment and Web Environment, the number of trainees become less gradually over the years for UFT Training.  Everybody wants to learn Selenium though it supports only Web Application Automation testing.  Everybody prefers Selenium than UFT.  This is our own experience for the past 4 years.  As we conduct Selenium Training in Velachery, Chennai – we could see this gradual shift!  Even we inquire some of our friends who are in Tambaram, Sholinganallur, Taramani or OMR.  Everybody feels the same. Is Selenium easier than UFT? What could be the main reason for this shift?  Is it easy to learn than Selenium?  Definitely No!  Selenium depends on OOP languages where as UFT depends on VB Script, which is comparatively an easy language to learn.  What else could be the reason for growing number of trainees getting enrolled for Selenium Training in Chennai?  Let me explain that through an analogy.   Does anyone buy Torch light nowadays?  When did you see any guy listening to songs through FM Radio device?  Do you feel Calculator and Camera sales face a big deep fall in […]

சாப்ட்வேர் எங்கு தொடங்குகிறது? – 6

முந்தைய பதிவில் நாம் பார்த்த நகைக்கடைக்கு இணையத்தளம் என்னும் எடுத்துக்காட்டின் அடிப்படையில் இதைக் கொஞ்சம் பார்ப்போம்! முந்தைய பதிவைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு இப்பதிவிற்கு வாருங்கள்! இதைப் பார்ப்பதற்கு முன்னர் அறிவொளியின் மகள் தமிழினியின் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோமே! அந்தப் பேச்சை முடித்து விடுவோமே! தமிழினியின் திருமணத்திற்குச் சமையல் வேலை செய்ய ஆள் தேடிக் கொண்டிருந்தோமே! நினைவிருக்கிறதா? ஒவ்வொரு சமையல்காரரும் வந்து, எந்தத் தேதியில், எத்தனை பேருக்கு, என்னென்ன, எத்தனை வேளைகள் , எவ்வளவு செலவில் சமைக்க வேண்டும்? என்பன போன்ற விவரங்களைப் பேசுவார்கள் என்று பார்த்தோமே! சரி! நினைவுக்கு வந்திருக்கும். இப்போது உங்களிடம் சில கேள்விகள்! மேலே உள்ள கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலைச் சமையல்காரர்களிடம் யாரால் சொல்ல முடியும்? சமையல்காரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யாரால் சரியான பதில் சொல்ல முடியும்? சொல்லுங்களேன். இதென்ன சாதாரண கேள்விகள் தானே! அறிவொளி தான் முடிவெடுப்பார்; அவர்தாம் சமையல்காரர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்வார் என்கிறீர்களா? சரியாகச் சொன்னீர்கள். இதே போல் தான் நகைக்கடைக்காரர் – மென்பொருள் நிறுவன எடுத்துக்காட்டும்! நகைக்கடைக்காரர் – மென்பொருள் நிறுவன எடுத்துக்காட்டில் – முந்தைய பதிவின் கடைசியில், நம் முன்னால் நிற்கும் கேள்விகள்: நகைக்கடைக்காரரைப் போய் நம்முடைய மென்பொருள் நிறுவனத்தில் இருந்து யார் பார்ப்பார்கள்? இந்த ஆவணப்படுத்தும் வேலையை வாடிக்கையாளர் செய்வாரா, வாடிக்கையாளரைப் போய்ப் பார்க்கும் நம்முடைய ஆள் செய்வாரா? அந்த ஆவணத்தில் என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும்? உருவாக்கப்படும் ஆவணம் – சரியாகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான உறுதி என்ன? இவற்றை ஒன்றொன்றாகப் பார்ப்போம். நகைக்கடைக்காரரைப் போய் நம்முடைய மென்பொருள் நிறுவனத்தில் இருந்து யார் பார்ப்பார்கள்? மென்பொருள் நிறுவனத்தில் இருந்து நகைக்கடைக்காரரைப் போய்ப் பார்ப்பவருக்கு நகைக்கடை வியாபாரம் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், நகைக்கடை முதலாளி சொல்லும் விவரங்கள் புரியாமல் போய் விடும். அந்த விவரங்களைக் குறிப்பெடுத்து, நம்முடைய பொறியாளர்களுக்குப் புரியும் வகையில் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் திறமைகளைக் கொண்டவரை நம்முடைய வாடிக்கையாளரின் (நகைக்கடைக்காரரின்) வியாபாரம் பற்றி நன்கு தெரிந்தவர் என்று சொல்லலாம் தானே! இப்படிப்பட்ட திறமைகளைக் கொண்டவரைத் தான் நிறுவனங்கள் வாடிக்கையாளரைச் சந்திக்க அனுப்புகின்றன. அவர்களுக்கு ‘வணிக ஆய்வாளர்’ (‘பிசினஸ் அனலிஸ்ட் (Business Analyst)’) என்று பெயர். சில நிறுவனங்களில் இந்த வேலையை மேலாளர் நிலையில் உள்ள ஊழியர்கள் செய்வார்கள். இந்த ஆவணப்படுத்தும் வேலையை வாடிக்கையாளர் செய்வாரா, வாடிக்கையாளரைப் போய்ப் பார்க்கும் நம்முடைய ஆள் செய்வாரா?நீங்கள் கடைக்குப் போய் வரிசையாகப் பல பொருட்கள் வேண்டும் என்று ஒவ்வொன்றாகச் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ள வேண்டியது வாடிக்கையாளராகிய உங்கள் கடமையா? கடைக்காரரது கடமையா? கடைக்காரரது தானே! இங்கும் அதே நிலை தான்! நகைக்கடைக்காரரைப் போய்ப் பார்க்கும் நம்முடைய ஊழியர் தான், விவரங்களைத் தொகுத்து எழுதியோ […]

By |June 23rd, 2017|Blogs|0 Comments

சாப்ட்வேர் டெஸ்டிங் எங்கு தொடங்குவது? – 5

சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படைகளைப் பார்த்து விட்டோம்.  இப்போது நம் முன்னால் இருக்கும் கேள்வி – சாப்ட்வேர் டெஸ்டிங்கை எங்கு, எப்படித்  தொடங்குவது? என்பது தான்! ஒரு மென்பொருளைச் சோதிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், முதலில் அந்த மென்பொருள் தயாராக இருக்க வேண்டும் அப்படித் தானே! எனவே, எப்படி ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது? வாடிக்கையாளரிடம் இருந்து மென்பொருளுக்கான தகவல்களை எப்படிப் பெறுவது?  யார் அந்தத் தகவல்களை வாங்கித் தருவார்கள்? வாங்கிய தகவல்களை வைத்துக் கொண்டு நம்முடைய நிறுவனம் (அதாவது மென்பொருளை உருவாக்கும் நிறுவனம்) என்ன செய்யும்? எப்போது நமக்கு டெஸ்டிங்கிற்குத் தருவார்கள்? இப்படிப் பல கேள்விகள் இருக்கின்றன.  சரி தானே! இவற்றையெல்லாம் பற்றிப் பேசுவதற்கு முன்னர், ஒரு சிறிய கதையைப் பார்ப்போம். தமிழினிக்குத் திருமணம்:   நல்லூர் என்பது ஓர் அழகிய சிற்றூர்.  அந்தக் கிராமத்தில் அறிவொளி என்பவர் வாழ்ந்து வந்தார்.  அவருடைய ஒரே மகள் தமிழினி.  தமிழினி சிறு வயதில் இருந்தே பேச்சிலும் எழுத்திலும் படு சுட்டி!  அவளும் வளர்ந்து படித்து, திருமண வயதை எட்டினாள்.  அவளுக்குத் தகுந்த மணமகன் தேடும் வேலையைத் தொடங்கினார் அறிவொளி.  கதிரவன் என்பவர் தகுந்த மணமகனாகப் படவே மகளிடமும் பேசி ஒப்புதல் வாங்கித் திருமண வேலைகளைத் தொடங்கினார்.  ஒரே மகளின் திருமணம் என்பதால் தடபுடலாக நடத்த விரும்பிய அறிவொளி, பெரிய திருமண மண்டபம் ஒன்றை வாடகைக்குப் பிடித்தார்.  ‘கல்யாண வீடு என்றாலே சாப்பாடு ரொம்ப முக்கியம், வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும்’ என்று நினைத்த அறிவொளி, பல பேரிடம் போய் “நல்ல சமையல்காரர்கள் இருந்தால் சொல்லுங்கள், என் மகள் திருமணத்திற்குச் சமையலுக்குத் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லி வைத்தார்; பலரும் பல சமையல்காரர்கள் முகவரிகளைக் கொடுத்தார்கள்.  அவர்கள் ஒவ்வொருவரையும் அலைபேசியில் கூப்பிட்டு ‘நீங்கள் நேரில் என்னுடைய வீட்டுக்கு வர முடியுமா?  அடுத்த மாதம் என்னுடைய மகள் திருமணத்திற்குச் சமையலுக்கு ஆள் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னார்.  அவர் கூப்பிட்ட படி, ஒவ்வொரு சமையல்காரரும் வந்து, 1. எந்தத் தேதியில் சமைக்க வேண்டும்? 2. எத்தனை பேருக்குச் சமைக்க வேண்டும்? 3. என்னென்ன சமைக்க வேண்டும்?  சைவமா? அசைவமா? 4. எத்தனை வேளைகள் சமைக்க வேண்டும்? 5. இதற்கெல்லாம் அறிவொளி எவ்வளவு செலவு பண்ணலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்? 6. அவர் கேட்கும் உணவு வகைகளுக்கு எவ்வளவு ஆகும்?  தங்களால் அவற்றைச் செய்ய முடியுமா? என்பன போன்ற விவரங்களைப் பேசுவார்கள் அல்லவா?  பேசிய விசயங்களை எல்லாம் எழுதி ஆவணப்படுத்தித் திட்டமிட்டு வேலை செய்யத் தொடங்குவார்கள் அல்லவா?  எனவே இதை ஒரு திட்டமிட்ட பணி (வேலை) என்று சொல்லலாம்.  இதைத் தான் – திட்டப்பணி (புராஜெக்ட்)   என்று சொல்கிறார்கள். வாடிக்கையாளர் தேவை ஆவணம் – Business Requirement Specification (BRS) அறிவொளியின் மகள் திருமணத்திற்குச் […]

By |June 18th, 2017|Blogs|0 Comments

சாப்ட்வேர் டெஸ்டிங் – இணைய வழி இயங்கும் மென்பொருள் சோதனைகள் -4

என்ன இது? தலைப்பே புரியவில்லை என்று தோன்றுகிறதா? கவலைப்படாதீர்கள்! புரியும்படிப் பார்த்து விடலாம்! இணையம் இல்லாமல் எந்தெந்த மென்பொருள்கள் (சாப்ட்வேர்) எல்லாம் இயங்காதோ, அவையெல்லாம் இணைய வழி இயங்கும் மென்பொருள்கள் தாம்! அப்படியானால், கணியம்.காம் என்பது இணையவழி இயங்கும் மென்பொருள் – சரிதானா என்கிறீர்களா? நூற்றுக்கு நூறு சரிதான்! ஓர் இணையத்தளத்தையோ, வலைப்பூவையோ சோதிக்க வேண்டுமானால் அடிப்படையில் எதையெல்லாம் கவனம் எடுத்துப் பார்க்க வேண்டும் – அவற்றைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம். 1. பயன்பாட்டுச் சோதனை (‘Usability Test’)  இணையத்தளத்தைப் பொருத்தவரை, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்க வேண்டும். எளிமையான பயன்பாட்டு முறைக்காகப் பல்வேறு வழிமுறைகளை இணையத்தளங்கள் பின்பற்றி வருகின்றன. அந்த வழிமுறைகள் நாம் சோதிக்கும் இணையத்தளத்திலும் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். சில எளிய எடுத்துக்காட்டுகளை உங்களுக்குக் காட்டுகிறேன். அ. ஜிமெயில் போன்ற இணையத்தளங்களில் முகப்புப் பக்கத்தில், நீங்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த பயனர் பெயர் கீழ்வரிசையில் தெரியும். நீங்கள் அந்த வரிசையில் இருந்து பயனர் பெயரைத் தெரிந்தெடுத்துக் கொள்ளலாம். ஆ. கடவுச்சொல்லை நினைவில் கொள்க (‘Remember Password’) என்னும் தேர்வைக் கொடுப்பது. இ. விண்ணப்பப் படிவங்களில் நாடுகளின் பெயர்கள், மாநிலங்களின் பெயர்கள், மாதங்கள் ஆகியவற்றைக் கீழ் வரிசைப் பட்டியலில் தருவது. 2. இணைப்புச் சோதனை (‘Link, Navigation Test’) தலைப்பை வைத்தே ஓரளவு ஊகித்திருப்பீர்கள்! உங்கள் ஊகம் சரி தான்! இணையத்தளச் சோதனையில் மிகவும் முக்கியமானது இது! அதே வேளையில் ரொம்ப எளிதானதும் கூட! இணையத்தளத்தை விட்டு விடுங்கள். ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். நீங்களும் உங்கள் நண்பரும் வண்டியில் நீண்ட தூரம் போய்ப் பார்க்க விரும்புகிறீர்கள். வண்டியை எடுத்துக் கொண்டு பல மைல் தூரம் போய் விட்டீர்கள். போன பிறகு அங்கிருந்து எப்படித் திரும்பி வருவது என்று தெரியவில்லை! ஏதாவது வழிகாட்டிப்பலகை, சாலையை ஒட்டி இருக்காதா, என்று பார்த்துக் கொண்டே வருவீர்கள் – அப்படித் தானே! அந்த வழிகாட்டிப் பலகை தான் உங்களைத் தொடங்கிய இடத்திற்கே கொண்டுவந்து சேர்க்க உதவும்! இதே தான் இணையத் தளத்திலும்! 1) நீங்கள் இணையத்தளத்தின் ஒரு பக்கத்தில் இருந்து எந்தெந்த இணைப்புகளையெல்லாமோ தொட்டுத் தொட்டு ஏதோ ஒரு பக்கத்திற்கு வந்து விட்டீர்கள்! வந்த பிறகு மீண்டும் முதல் பக்கத்திற்குப் போக வேண்டும் என்றால் என்ன செய்வது? சாலையில் வழிகாட்டிப் பலகை இருந்தது போல, இங்கும் வழிகாட்டிகள் இருக்க வேண்டாமா? அப்படி வழிகாட்டிப் பலகையே இல்லை என்றால் நீங்கள் நிற்கும் இடத்தில் இருந்து வெளியேற முடியாது தவிப்பீர்கள். இணையத்தில் இப்படி இணைப்புகளே இல்லாமல் தனித்து நிற்கும் இணையப்பக்கங்களுக்குத் தனிமரங்கள் (‘Orphan pages’) என்று பெயர்! இப்படித் தனிமரங்கள் இல்லாமல் உங்கள் இணையத் தளத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இணைப்புகள் இருந்தால், அந்த இணைப்புகள் சரியாக வேலை செய்ய வேண்டும். […]

By |June 13th, 2017|Blogs|0 Comments

Mobile App Development Course: iOS, Android or Ionic?

Everybody knows the power of Mobile Applications.  Due to the rise of Mobile App Development, many youngsters are coming to us asking Mobile Application Development Training in Chennai.  Their main focus is on either Android Training as it leads the with more than 60%.  The second choice is very obvious – iOS.  This has more than 20% of Mobile App market. Different Programming Languages – A Bane For those, who opt for Android training, will go for Java Training initially.  iOS developers will learn Objective-C or Swift language in their training.  If anyone chooses Windows for Mobile, it is .NET to learn.  Learning different languages for different platforms becomes annoyance for developers.  Though one is very good in Android App Development, he/she can never enter into iOS arena.  The vice versa is also the same.  Moreover, if an organization needs a Mobile App in all three platforms, they need three different development teams to work on.  There is no code sharing between these teams as they use different languages.  And, the organization needs to spend more money also as the hiring cost would be greater.  Thus, it becomes bother for them as well. One Solution for Many problems? As different platforms are dependent or different languages, can we omit all those programming languages?  Can we focus on getting training on cross platform Mobile Applications which will suite for almost all platforms? Yes, we can!  Ionic training is one of the best solutions!  It has open source SDK.  The powerful usage of HTML5 and JavaScript helps Ionic to access the native platform layer. Benefits of Ionic Training in Chennai: Open Source and Free Suitable for both Android and iOS No new programming language needs to be […]

By |June 11th, 2017|Blogs|0 Comments

சாப்ட்வேர் டெஸ்டிங் சாப்ட்வேர் என்றால் என்ன? – 3

முந்தைய பதிவுகளில் டெஸ்டிங் என்றால் என்ன என்பது பற்றியும் சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படை நோக்கம் பற்றியும் பார்த்திருந்தோம்.  இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி – சாப்ட்வேர் (மென்பொருள்) என்றால் என்ன?  இதெல்லாம் என்ன கேள்வி?  இதோ சொல்கிறேன் – கணினிக்கு ஏதோ ஓர் உள்ளீட்டைக் கொடுத்து தேவைப்படும் பதிலை எடுத்துக்கொள்வது – சரிதானா?  என்கிறீர்களா!  நூற்றுக்கு நூறு சரி!  மென்பொருள் என்பது அது தான்!  அதைத் தான் நாம் சோதிக்கப் (டெஸ்டிங்) போகிறோம். மென்பொருளை, லினக்சில் இயங்கும் மென்பொருள், விண்டோஸ் மென்பொருள், மேக் மென்பொருள் என்று இயங்கு தள அடிப்படையிலோ,  ஜிமெயில், பேஸ்புக், டக்டக்கோ என்று பயன்பாட்டு அடிப்படையிலோ பல வகைகளில் பிரிக்கலாம்.  எந்த வகைகளில் பிரித்தாலும் நம்முடைய வேலை அவற்றைச் சோதிப்பது!  சோதித்து வாடிக்கையாளரைப் பாதிக்கும் தவறுகளை உருவாக்குநரிடம் (டெவலப்பரிடம்) எடுத்துச் சொல்வது!  இவை தாம் சாப்ட்வேர் டெஸ்டராக நம்முடைய வேலை!  எனவே நம்முடைய வேலையின் அடிப்படையில் சாப்ட்வேரை இரண்டு பெரும் பிரிவுகளில் பிரித்து விடலாம். 1. கணினியில் நிறுவி (இன்ஸ்டால் செய்யப்பட்டு) இயங்கும் மென்பொருள் 2. இணைய வசதியுடன் இயங்கும் மென்பொருள் அடிப்படையாக இந்த இரண்டு வகை மென்பொருள்களையும் சோதிக்கத் தெரிந்தாலே நாம் ‘டெஸ்டர்’ என்று சொல்லிக் கொள்ளலாம்.  இவற்றை எப்படிச் சோதிப்பது?  பார்ப்போம். 1. கணினியில்  நிறுவி (இன்ஸ்டால்  செய்யப்பட்டு)  இயங்கும்  மென்பொருள் இந்தத் தலைப்பை வைத்தே இவ்வகை சாப்ட்வேரை எப்படிச் சோதிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.  ஆமாம்!  நாம் செய்ய வேண்டிய முதல் சோதனை – மென்பொருளை நம்மால் எளிதாக கணினியில் நிறுவ முடிகிறதா என்பது தான்! இயங்குதளப்  பொருத்தச்  சோதனை (‘OS Compatibility Test’) உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் லினக்ஸ் தளத்தில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளதா, விண்டோசுக்காக உருவாக்கப்பட்டுள்ளதா, ஆண்டிராய்டுக்கா எனப் பார்த்து அந்தந்த இயங்குதளத்தில் நிறுவிச் சிக்கல் வருகிறதா எனப் பார்க்க வேண்டும். சில மென்பொருள்கள்,  இயங்குதளத்தின் குறிப்பிட்ட பதிப்புகளுக்கு மட்டும் இயங்குமாறு உருவாக்கப்பட்டிருக்கும்.  எடுத்துக்காட்டாக, விண்டோஸ் 7 அல்லது 8இல் மட்டும் இயங்குமாறு சில மென்பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.  அந்நிலையில் அவற்றைப் பொருத்தமான (விண்டோஸ் 7, 8) இயங்குதளங்களில் மட்டும் நிறுவி, நிறுவலில் ஏதாவது சிக்கல் வருகிறதா எனச் சோதிக்க வேண்டும். இச்சோதனைக்கு இயங்குதளப் பொருத்தச் சோதனை (‘OS Compatibility Test’) என்று பெயர். நிறுவல் – உயர்த்தல் சோதனைகள்: பொதுவாக லிபர் ஆபிஸ் போல ஒரு மென்பொருளை விண்டோசில் நிறுவுகிறீர்கள் என்றால், இயல்பாகவே அது c:\Program Files\ என்பது போல ஓர்  இயல்பு நிலை அமைவிடத்தில் நிறுவப்பட்டு விடும்.  இல்லை எனக்கு c:\Program Files\ வேண்டாம்; நான் வேறு இடத்தில் நிறுவுகிறேன் என்றால் நீங்கள் இடத்தை மாற்றிக் கொள்ளலாம்.  இந்த இருவகை நிறுவலையும் நாம் சோதிக்க வேண்டும். இயல்பு நிலை இடத்தில் (டீஃபால்ட் லொகேசன்)  மென்பொருளை […]

சாப்ட்வேர் டெஸ்டிங் தரம் என்றால் என்ன? – 2

தரம் என்றால் என்ன என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தோம்.  யோசித்துப் பார்த்தீர்களா?  தரம் என்று எதைச் சொல்வது?  விலை அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தரமானது என்று சொல்லலாமா?  பொது நிலையில் அது சரி என்று தோன்றினாலும் உண்மை அதுவாக இருக்காது.  விலை அதிகம் என்பதோடு தரமும் இல்லாத பொருட்கள் ஏராளம் சந்தையில் கிடைக்கின்றன.  சரி!  குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்கள் தரமற்றவை என்று சொல்ல முடியுமா?  அப்படியும் வரையறுத்துச் சொல்ல முடியாது. ஏனென்றால், தரமான சில பொருட்கள் குறைந்த விலையில் நமக்குக் கிடைக்கின்றன.  சரி!  இதையும் விட்டு விடலாம். இலவசமாகக் கிடைக்கும் பொருட்களைத் தரமற்றவை என்று ஒதுக்கி விடலாமா?  அப்படியும் சொல்லிவிட முடியாது.  ஏனென்றால், விலை கொடுத்து வாங்கும் பல மென்பொருட்களை விட, இலவசமாகக் கிடைக்கும் வி எல் சி மீடியா பிளேயர், பயர்பாக்ஸ், லினக்ஸ் எனக் கட்டற்ற பல மென்பொருள்கள் தரமாக இருக்கின்றன.  எனவே, இதனால் சகல   மாணவர்க்கும் அறிவிப்பது என்னவென்றால், விலைக்கும் தரத்திற்கும் வரையறுக்கப்பட்ட எந்தத் தொடர்பும் கிடையாது. சரி!  ஒரு பொருளைத் தரமான பொருள் என்று எப்போது சொல்வீர்கள்?  ஒரு பொருள்  எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்தால் அதைத் தரமான பொருள் என்று சொல்லலாம். அப்பொருளில் சிற்சில குறைபாடுகள் இருக்கலாம்; தவறில்லை.  ஆனால் வாடிக்கையாளர் எதை எதிர்பார்த்து அப்பொருளை வாங்குகிறாரோ அந்த முதன்மையான எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட வேண்டும்.  இந்த எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மாறலாம். நீங்கள் ஓர் அலைபேசி வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  நீங்கள், உங்கள் அம்மாவிற்கோ அப்பாவிற்கோ வாங்கும் போது உங்களுடைய முதன்மை எதிர்பார்ப்பு – பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.  அதே அலைபேசியைக் கல்லூரியில் படிக்கும் உங்கள் தம்பிக்கோ தங்கைக்கோ வாங்கினால், எதிர்பார்ப்பு மாறிவிடும். பயன்படுத்தக் கடினமாக இருந்தாலும் பரவாயில்லை – இணையம் முதலிய எல்லா வசதிகளும் இருக்க வேண்டும் என்பதாக இருக்கும்.  சரிதானே!  எல்லா வசதிகளுடன் கூடிய அலைபேசி வாங்கும் போது அதில் பேட்டரி நீண்ட நேரம் நிற்காமல் போகலாம்.  ஆனால் பேட்டரி நிலைத்து நிற்க வேண்டும் என்பது உங்களுடைய அடிப்படைத் தேவையில்லை.  எனவே ஏற்றுக்கொள்ளத் தயங்க மாட்டீர்கள்.  சரி தானே! எனவே, தரம் என்பதற்கு, வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவு செய்வது சரியான பொருளுக்குச் சரியான விலை கொண்டு சரியான வசதிகளைக் கொடுப்பது குறைகள் ஏதுமின்றிப் பொருள் இருப்பது (அல்லது கண்ணுக்குத் தெரியாத குறைகளை மட்டும் கொண்டிருப்பது) எனப் பல விளக்கங்களைக் கொடுக்கலாம். இந்தத் தரம், வெளியாகும் மென்பொருளில் இருக்கிறதா என்று சோதிப்பது தான் சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படையாகும்.  சரி!  டெஸ்டிங் ஏன் செய்கிறோம் என்னும் அடிப்படையைப் புரிந்து கொண்டீர்கள்!  சாப்ட்வேர் என்றால் என்ன?  அதில் டெஸ்டிங்கின் அடிப்படைகள் என்னென்ன?  பேசுவோம்!

சாப்ட்வேர் டெஸ்டிங் என்றால் என்ன? – 1

சாப்ட்வேர் டெஸ்டிங் என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் ‘டெஸ்டிங்’ என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.  ‘டெஸ்டிங்’ என்றால் என்ன?  சோதிப்பது, ஆய்ந்து பார்ப்பது என்று சொல்லலாம்.  சோதிப்பது என்றால் எதைச் சோதிப்பது?  பள்ளிக்கூடத்தில் ‘டெஸ்ட்’ (தேர்வு) என்று வைக்கிறார்கள்.  அங்கே என்ன சோதிக்கிறார்கள்?  ஆசிரியர் கற்றுக்கொடுத்த பாடம் முழுவதும் மாணவர்களைப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்று சோதிக்கிறார்கள்.  அந்தச் சோதனைக்கு மொத்தம் நூறு மதிப்பெண் வைத்துக்கொள்கிறார்கள்.  அதில் நூற்றுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறார்களோ அந்த அளவு சோதனை (டெஸ்ட்) வெற்றி என்று சொல்கிறார்கள்.  அப்படித் தானே! அதாவது, மாணவர்கள் நூறு சதவீதம் படித்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் எதிர்பார்க்கிறார். அந்த எதிர்பார்ப்பை மாணவர்கள் எந்த அளவு நிறைவேற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து 60, 70, 80 என மதிப்பெண்கள் கொடுக்கிறார்.  எனவே டெஸ்டிங்கின் வெற்றி, தோல்வி என்பது எந்த அளவு எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது.  100க்கு 100 எடுத்தால் வெற்றி! இதே போல் தான் சாப்ட்வேர் டெஸ்டிங் என்பதும்!  நீங்கள் ஒரு கணினி நிறுவனம் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  உங்களிடம் ஒரு ஒரு வாடிக்கையாளர், “கணியம்.காம் போலவே எனக்கு ஒரு இணையத்தளம் வேண்டும்” என்று கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  நீங்களும் உடனடியாக உங்கள் நிறுவன ஊழியர்களை வைத்து இணையத்தளத்தை வடிவமைக்கத் தொடங்கி விடுவீர்கள்.  இந்த இணையத்தளம் வாடிக்கையாளர் கேட்ட எல்லாச் செயல்பாடுகளையும் நிறைவு செய்கிறதா –  என்று வாடிக்கையாளரிடம் மென்பொருளை ஒப்படைப்பதற்கு முன்பு நன்றாகச் சோதிப்பது தான் சாப்ட்வேர் டெஸ்டிங்!  வாடிக்கையாளர் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவு செய்தால் டெஸ்டிங் வெற்றி!  இல்லையெனில் தோல்வி!  அவ்வளவு தான்! மேல் உள்ள எடுத்துக்காட்டில் நாம் ஓர் இணையத்தளத்தை எடுத்துக் கொண்டோம்.  பொதுவாக, சாப்ட்வேர் என்பது இணையத்தளம் மட்டுமல்லாது பயர்பாக்ஸ் போல நிறுவி இயங்கும் மென்பொருளாகவோ, அலைபேசிகளில் இயங்கும் ‘ஆப்’ செயலியாகவோ எனப் பல வகைகளில் இருக்கலாம்.  இவற்றில் எதுவாக இருந்தாலும், அந்த மென்பொருள் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவு செய்கிறதா என்று பார்ப்பது தான் சாப்ட்வேர் டெஸ்டிங் ஆகும். நாம் உருவாக்கி ஒப்படைத்த மென்பொருளில், வாடிக்கையாளர் கேட்ட எல்லாச் செயல்பாடுகளும் எதிர்பார்த்தபடி இயங்கினால், வாடிக்கையாளர்  ‘நல்ல மென்பொருள்’, ‘தரமான மென்பொருள்’ என்று மற்றவர்களிடம் பரிந்துரைப்பார்.  தரமான மென்பொருள் மூலம் வாடிக்கையாளரும் வளர்வார்.  நம்முடைய வியாபாரமும் வளரும்!  இப்படி ‘தரமான மென்பொருளை’ உருவாக்குவதற்குப் பயன்படுத்தும் உத்தி தான் ‘சாப்ட்வேர் டெஸ்டிங்’ ஆகும். சரி!  ‘தரம்’ என்றால் என்ன?  இரண்டாயிரம் ரூபாய்க்கு அலைபேசி வாங்குபவரும் தரமான அலைபேசி என்கிறார்!  இருபதாயிரம் கொடுத்து வாங்குபவரும் தரமான அலைபேசி என்கிறார்.    அப்படியென்றால் ‘தரம்’ என்பதை எப்படி அளவிடுவது?  தரமான மென்பொருள் என்று எப்படி வரையறுப்பது?  தரம் என்பதன் அளவுகோல் விலையா?  வெளித்தோற்றமா?  வேறு எதுவுமா?  அடுத்த பதிவில் […]

Java Training Institutes In Chennai – Top 9 FAQ

Here with, I am publishing the FAQs on Java Training Institutes in Chennai. According to google, there are 6,53,000 results shown in less than a minute’s time. Many people search for this to find out the best Java Training Institutes in Chennai. 1) Why do people search for Java Training Institutes in Chennai? The answer is straight and simple. Most people want to be IT industry and learning Java will boost their Job Opportunities. The scope for Java has raised after the raise of Android Mobile phones as it is used to create Android Apps too. 2) I am a Chennai based Computer Science Graduate. Do you think, it is good to have Java training in any of the institutes? Not necessarily. It is not about what graduate you are. It is about what skill set you have or You want to have. If you feel you are not good in Programming even after your graduation, it is good to have extra training on a programming language like Java from the training institutes in Chennai. 3) What should I focus more in Java as a Fresher? For a fresher, it is mandatory that he/she should be very good in basics. If it is Java, OOPs basics are essential. The concepts like Polymorphism, Abstraction, Encapsulation are necessary things to learn. 4) Shall I go for Advanced concepts (J2EE) directly as it has more Job opportunities? No, not at all. First of all, you should not select your professional course only based on the opportunities. Your skill set should play a vital role in selecting a professional course. There is nothing harm in minding Job opportunities as well along with your talent. But, Job opportunities is just […]

By |September 22nd, 2015|Blogs|0 Comments